Vaikom Muhammad Basheer - India Ilakkiya Sirpikal / வைக்கம் முகம்மது பஷீர்



  • ₹50

  • SKU: SA0013
  • ISBN: 9789391017521
  • Translator: Thoppil Mohamed Meeran
  • Author: M.N.Karassery's
  • Language: Tamil
  • Pages: 130
  • Availability: In Stock

வைக்கம் முகம்மது பஷீர் (1908-1994) நாவலாசிரியராகவும். சிறுகதையாசிரியராகவும் தேசிய அளவில் புகழ்பெற்ற படைப்பாளி. இந்திய விடுதலைக்காகப் போராடி சிறைச்சென்றவர். பஷீரின் படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. எங்கள் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது. இளமைக்காலத் தோழி, பாத்துமாவின் ஆடு, சப்தங்கள். மூன்று சீட்டு விளையாட்டுக்காரனின் மகள், மதில்கள்... என 38 படைப்புகள், மலையாளத்தில் முதன் முதலாகத் தொடர்கதை என்ற இலக்கியப் பிரிவைத் துவக்கி வைத்தார் பஷீர். இவருடைய சில சிறுகதைகளும், நாவல்களும் திரைப்படமாக்கப்பட்டன. பஷீர் படைப்புகளில் காணப்படும் எள்ளலும் நகைச்சுவையும் வாசகர் மனங்களில் ஆழப்பதியவும் சிந்திக்கத் தூண்டவும் செய்யக்கூடியவை. மனிதநேயமிக்க இந்த படைப்பாளி, வாழ்க்கையில் மிஸ்டிக் தன்மையை தூக்கலாகப் படைப்புகளில் காட்டுகிறார்.

 

எம்.என்.காரச்சேரி (02.07.1951) என்ற புனைப்பெயரில் எழுதிவரும் இவருடைய பெயர் முஹியுத்தீன் நடுக்கண்டியில் என்பதாகும். சிறிது காலம் 'மாத்ருபூமி' மலையாள தினசரியில் உதவி ஆசிரியராக இருந்தார். இப்போது கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் மலையாளப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். சிறந்த சிந்தனையாளர். முற்போக்குவாதி. மலையாள மாப்பிள்ளைக் கவிஞர் மோயின்குட்டி வைத்தியருடைய ஹுஸ்னுல் ஜமால் என்ற காப்பியத்தை இவர் குழந்தைகளுக்காகச் சுருக்கி எழுதியதை சாகித்திய அகாதெமி தமிழில் வெளியிட்டிருக்கிறது. பல ஆய்வு நூல்கள், கட்டுரைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார்.

 

தோப்பில் முகம்மது மீரான் (26.09.1944) குமரி மாவட்டம் தேங்காய்ப்பட்டணம் சொந்த ஊர், 5 நாவல்களும் 6 சிறுகதைத் தொகுதிகளையும் தவிர வேர்களின் பேச்சு எனும் தலைப்பில் 1968 முதல் 2009 வரை வெளியான சிறுகதைகளின் ஒரு தொகுப்பு. சாகித்திய அகாதெமியின் Writer in Residence திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆங்கிலம் உள்பட பல இந்திய மொழிகளில் இவருடைய படைப்புகள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சாகித்திய அகாதெமிக்காக பல படைப்புகளை மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். 1997-இல் சாகித்திய அகாதெமி விருது அவருடைய 'சாய்வு நாற்காலி' என்ற நாவலுக்குக் கிடைத்தது.

 

 

 

Write a review

Captcha

Related ProductsAdd Related Product to weekly line up